அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிப்பில் ‘பெண்டுலம்.’ சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது!

தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிதாகவே வரும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத, புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லராக ‘பெண்டுலம்’ உருவாகிறது.

சூர்யா இந்திரஜித் ஃபிலிம்ஸ் (SURYA INDRAJIT FILMS)  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா, ஶ்ரீபதி, ஶ்ரீகுமார், டிஎஸ்கே, விஜித், ஃஎப்ஐஆர் ராம், பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதல்முறையாக எட்டு கதாபாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக உருவாகவிருக்கிற, இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்த பி.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மேக்கிங் கேமரா மேனாக பணியாற்றியவர்!

சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா முதலாக இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு திரைpபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

படக்குழு:-

தயாரிப்பு – திரவியம் பாலா (SURYA INDRAJIT FILMS)
இயக்குநர் : B.சதீஸ் குமரன்
இசை: சைமன் கிங்
ஒளிப்பதிவு : ஆனந்த்
எடிட்டர்: ராம் சதீஷ்
கலை இயக்குனர்: K.B.நந்து விஜித் பாடலாசிரியர்: விவேகா, கு கார்த்திக்
சண்டைப்பயிற்சி : டான் அசோக்
நடன இயக்குனர்: ராஜேஷ்.J
ஒப்பனை: அப்துல் ரசாக்
உடைகள் : பெருமாள் செல்வம்
விஷுவல் எஃபெக்ட்ஸ் – டோனி மேக்மித்
தயாரிப்பு நிர்வாகி – பழனிவேல் V
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
ஸ்டில்ஸ் – ஜூடி
போஸ்டர் டிசைனர் – ராஜ் டிசைனர் பாயிண்ட்

Leave a Reply

Your email address will not be published.