பா. இரஞ்சித் இயக்கத்தில் காதலின் பரிபூரணத்தை சொல்கிற படமாக ‘நட்சத்திரம் நகர்கிறது.’ இன்று வெளியானது போஸ்டர்!

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியிருந்தார் பா.இரஞ்சித். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியானது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர், ஹரி, தாமு, வின்சு, வினோத், சுபத்ரா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை யாழிபிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

காதல் இங்கு அரசியலாகப் பார்க்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி வாழும் மனிதர்கள் மத்தியில் காதலைக் கொண்டாடும் விதமாக எதற்குள்ளும் அடைபடாத அதன் பரிபூரணத்தை சொல்லுகிற படமாக இது இருக்கும்’ என்கிறது படக்குழு!

ஒளிப்பதிவு -கிஷோர்,
இசை -டென்மா,
படத்தொகுப்பு- செல்வா RK,
கலை ரகு,
நடனம் -சாண்டி,
சண்டை- ஸ்டன்னர் சாம்,
உடைகள் – அனிதா ரஞ்சித், ஏகாம்பரம்
பாடல்கள் உமாதேவி, அறிவு.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp