பாண்டியராஜன் கதாநாயகனாக நடிக்கும் ‘ரியா .’ திகிலும் திரில்லும் கலந்த கதைக்களத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகிறது!

பழைய இருட்டுப்பாளையம் என்ற ஊரில் பேய் பங்களா ஒன்றில், தினம் தினம் நடக்கும் பலவித அமானுஷ்ய சம்பவத்தால் அந்த ஊர் மக்கள் பல்வேறு விபரீத பாதிப்புகளால் சிக்கிதவிக்கின்றனர். இதை ஒரு கும்பல் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு ஊர்மக்களிடத்தில் பயத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கச்செய்து சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு மர்மமாக மாயமாகிவிடுகின்றனர்.
அந்த சம்பவங்களின் பின்னனியில் நடந்தது என்ன? அவர்கள் அங்கு என்ன செய்தார்கள்? அவர்கள் என்னவானார்கள்? வெளிநாட்டிலிருக்கும் அந்த பேய் பங்களாவின் உரிமையாளர் பாண்டியராஜன் திரும்ப அந்த ஊருக்கு வந்தாரா? பங்களாவுக்கு சென்றாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைதான் படத்தின் கிளைமாக்ஸ்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு, திரில்லுக்கும், திகிலுக்கும் இடையில் காமெடி சரவெடியாய் படத்தை உருவாக்கி வருகிறோம்” என்றார்.
இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்த நிலையில் படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது!