‘காரி’, ‘சர்தார்’ வெற்றிப்பட தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்!

தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் வலுவான கதை அம்சம் கொண்ட அதேசமயம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வரும் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான ‘சர்தார்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையைக் கிளப்பியது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த ‘காரி’ திரைப்படம் ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியாகி வெற்றி பெற்றது.

அதையடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

‘கொலைகாரன்’ திரைப்படம், சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான ‘வதந்தி’ வெப் சீரிஸ் ஆகியவற்றை இயக்கி அவற்றின் வெற்றி மூலம் கவனிக்க வைத்தவர் ஆண்ட்ரூ லூயிஸ்.பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இருவரும் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp