பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அசைத்த இந்தியர்கள் பற்றிய கதைக்களத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947.’ குடியரசு தினத்தில் போஸ்டர் வெளியிட்டு சிறப்பித்த படக்குழு!

கெளதம் கார்த்திக் நடிக்க, பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ள படம் ‘ஆகஸ்ட் 16, 1947.’
இந்தியாவின் சுதந்திரம் குறித்த பின்னணியில் பரபரப்பாக உருவாகியிருக்கக்கூடிய இந்த படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டரை குடியரசு தினமான இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றிய கதைக்களம். ஒரு சிறிய கிராமம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வாழ்வையே அசைத்துப் பார்த்த வரலாற்றின் காட்சித் தொகுப்பே இந்த படத்தின் திரைக்கதை.
அதற்கேற்றபடி இந்த படத்தின் போஸ்டர் தேசபக்தி மற்றும் படத்தின் கதைக்கருவை தாங்கி நிற்கிற உணர்வைத் தருகிற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் கையில் தீப்பந்தத்துடனும் கண்ணில் எரியும் தாய்நாட்டு தேசபக்தியுடனும் இருக்கும்படி செதுக்கப்பட்டுள்ளது. அந்த நெருப்பு ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டதா அல்லது சோகமான முடிவை கொடுத்ததா? இந்த கேள்விகளுக்கான விடை படத்தின் திரைக்கதையில் இருக்கிறது.
இந்த படத்தின் டீசர் ஆன்லைனில் வெளியானதில் இருந்தே படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் அப்படியான இந்த படத்தின் போஸ்டர், குடியரசு தினத்தன்று வெளியாகியிருப்பது படத்துக்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளதோடு படம் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக்கியுள்ளது.
கெளதம் கார்த்திக்கோடு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை பொன்குமார் இயக்கியிருக்கிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரியுடன் இணைந்து இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார். இணைத் தயாரிப்பாளர் ஆதித்ய ஜோஷி.
