பா. இரஞ்சித்தின் உதவி இயக்குநரின் புதிய படத்தில் அசோக் செல்வன், சாந்தனு… படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார்கள்.
”இந்த படம் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது. படம் எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் விதமாக இருக்கும்” என்கிறார்கள் படக்குழுவினர்.
லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கணேசமூர்த்தி, சௌந்தர்யா கணேசமூர்த்தி.
நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பக் குழு:-
திரைக்கதை & வசனம் – தமிழ் பிரபா & ஜெய்குமார்
இசை- கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு- தமிழழகன்
கலை- ரகு
எடிட்டிங்- செல்வா ஆர்.கே
ஆடைகள் – ஏகாம்பரம்
ஸ்டில்ஸ்- ராஜா