கனமான கதையும் மது, மாது, போதை, லிப்லாக் முத்தக் காட்சிகளுமாய் கலந்து உருவான ‘ஆகாச வீதிலு.’ செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்திலும் ரிலீஸ்!

கௌதம் கிருஷ்ணா இயக்கும் முதல் திரைப்படம் ‘ஆகாச வீதிலு‘ (Aakasa Veedhullo).

இயக்குநரே படத்தின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் சத்யம் ராஜேஷ், ஸ்ரீகாந்த் அய்யங்கார், தேவி பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

விஸ்வநாத் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜுடா சாந்தி இசையமைத்திருக்கிறார்.

ஜி.கே. ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் மனோஜ் ஆர்ட் கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் ஜே. டி. மற்றும் டாக்டர் டி. ஜே. மணிகந்தா ஆகியோர் இணைந்து பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் பாடல்கள் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருவதுடன், இந்தப் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்த படம் செப்டம்பர் 2-ம் தேதி தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழகம் உட்பட உலகம் முழுதும் வெளியாகிறது.

மது, மாது, போதை என தன் இளமையை பொறுப்பில்லாமல் தட்டிக் கழிக்கும் நாயகனின் வாழ்க்கையில், காதலியாக ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு நாயகனின் வாழ்க்கை சரியான பாதையில் பயணித்ததா? இல்லையா? என்பதை இளைய தலைமுறையினர் ரசிக்கும் வகையிலான காதல் காட்சிகள், லிப்லாக் முத்த காட்சிகளுடன் உருவாக்கி இருக்கிறார்கள். கனமான கதையும் கமர்ஷியல் அம்சங்களும் சரிவிகிதத்தில் இணைந்திருக்கும் இந்த படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்பலாம்!

படத்தின் இயக்குநரும், நாயகனுமான கௌதம் கிருஷ்ணா சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியொன்றில் மருத்துவ பட்ட படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

படக்குழு விவரம்:-

writer & Directed by Gautham Krishna
Producer -Shri Manoj J.D, Dr.D.J.Manikantha
Music – Judah Sandhu
Dop -Vishwanathan Reddy
Editor -Seshank
Stunts -Dragon Prakash
Singers – Sid sriram,Chinmayi Sripada,Rahul sipligunj,Bhairava,Dope Daddy
PRO -Sivakumar

Leave a Reply

Your email address will not be published.