அழவைத்த அபிராமி! ‘பாபா பிளாக்‌ ஷீப்’ படப்பிடிப்பில் உணர்ச்சிப் பெருக்கு!

யூடியூப் பிரபலம் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில் பள்ளிக் குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், இன்ப துன்பம் என உள்ளிட்டவற்றின் கலவையாக உணர்ச்சிகரமான படைப்பாக உருவாகியிருக்கும் படம் ‘பாபா பிளாக்‌ ஷீப்.’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘விருமாண்டி’ அபிராமி இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் வருகிறார். உணர்ச்சிகரமான காட்சியொன்றில் படப்பிடிப்பில் பலரையும் கண்கலங்க வைக்கும் அளவுக்கு நடித்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் ராஜ்மோகன், ”இந்த படம் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. கதையில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. அதற்காக நடிகை அபிராமியை அணுகினேன். கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன் என்றார். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாபாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார். மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள்.

இது அபிராமிக்கு  மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தில் மதுரை முத்து, விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அட்டாகாசப்படுத்தியுள்ளார்கள். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் டீசரோடு சந்திக்கிறேன்” என்றார்.

நடிகர்கள்:-
அயாஸ்

நரேந்திர பிரசாத்
அம்மு அபிராமி
‘விருமாண்டி’ அபிராமி
RJ விக்னேஷ்காந்த்
சுப்பு பஞ்சு
சுரேஷ் சக்ரவர்த்தி
போஸ் வெங்கட்
வினோதினி வைத்தியநாதன்
சேட்டை ஷெரீப்
மதுரை முத்து
கேபிஒய் பழனி
ஓஏகே சுந்தர்
நக்கலைட்ஸ் பிரசன்னா
நக்கலைட்ஸ் தனம்தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
தயாரிப்பு நிறுவனம் – ரோமியோ பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – ராகுல்
ஒளிப்பதிவு –  சுதர்சன் சீனிவாசன்
இசை – சந்தோஷ் தயாநிதி
எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – MSP. மாதவன்
ஸ்டண்ட் –  ‘உறியடி’ விக்கி
நடன அமைப்பு – அஸார், லீலாவதி குமார்.
விளம்பர வடிவமைப்புகள் –  கோபி பிரசன்னா
பாடல் வரிகள் – யுகபாரதி, A.Pa.ராஜா, RJ விக்னேஷ்காந்த்.
ஸ்டில்ஸ் – வேலு
மக்கள் தொடர்பு –  சதீஷ் (AIM)

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp