ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் QR கோடு. வித்தியாசத்தால் கவனம் ஈர்க்கும் ‘டிமாண்டி காலனி 2’ படக்குழு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘டிமாண்டி காலனி 2’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ‘இருள் ஆளப்போகிறது’ என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘டிமாண்டி காலனி’ ஹாரர் படங்களை விரும்பும் ரசிகர்களிடம் புதுமையான கதை சொல்லலுக்கும் உறைய வைக்கும் காட்சிகளுக்காகவும் வரவேற்பு பெற்று ஹாரர் படங்களின் புது பிராண்டாக உருவானது.

அந்த வெற்றிப் பட கூட்டணி அதே படத்தின் 2-ம் பாகத்துக்காக மீண்டும் இணைகிற தகவல் வெளியானபோதே  ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.கடந்த சில நாட்கள் முன் வெளியான போஸ்டர்கள் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடுதலாக்கியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.

அந்த போஸ்டர்களில் QR கோடு இருக்கிறது. அதனை ஸ்கேன் செய்வதன் மூலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கலாம். இது போன்ற புது விளம்பர யுக்திகளும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.

‘டிமாண்டி காலனி2’ படத்தின் டேக் லைனாக ‘Vengeance of Unholy’ என்ற வாசகம் இடம்பெறுகிறது.

படக்குழு:-

இசை: சாம் சிஎஸ்,
ஒளிப்பதிவு: தீபக் டி மேனன்,
படத்தொகுப்பு: குமரேஷ் டி,
கலை இயக்கம்: ரவி பாண்டி,
சண்டைப் பயிற்சி: கணேஷ்,
ஆடை வடிவமைப்பு: நவதேவி ராஜ்குமார் & மாலினி,

 

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp