திரில்லர் ஜானரில் கனமான செய்தியோடு உருவாகும் ‘என் இனிய தனிமையே.’ ஜேம்ஸ் வசந்தன் இசையில் முதல் பாடல் வெளியீடு!

சமூகத்திற்குத் தேவையான ஒரு கனமான செய்தியுடன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம் ‘என் இனிய தனிமையே.’
வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி கதாநாயகனாகவும், ரீஷா கதாநாயகியாகவும் நடிக்க, சகு பாண்டியன் இயக்கும் இந்த படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவற்றில் முதல் பாடல் கடந்த ஜனவரி 26-ம் தேதி வெளியாகியுள்ளது.
‘சீதாராமம்’ படத்தின் மலையாள வெர்சனில் இடம்பெற்ற ‘ஒரு கரையாரிகே’ பாடல் புகழ் சிபி ஸ்ரீனிவாசன் இனிமைமையான லவ் பீட் பாடலை பாடியுள்ளார்.
வைக்கம் விஜயலட்சுமி இதயத்தை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட் பாடலொன்றை பாடியுள்ளார்.இந்த படம் படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவபாஸ்கரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
தொழில்நுட்பக் குழு:-
இயக்கம்: சகு பாண்டியன்
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
தயாரிப்பாளர்: S.P மாலதி
நிர்வாக தயாரிப்பாளர்: ஆட்டோ புலி முருகன்
ஒளிப்பதிவு: சிவபாஸ்கரன் (தங்கர்பச்சான் படங்களில் பணியாற்றியவர்)
படத்தொகுப்பு:திருச்செல்வம்
நடனம்: வாசு நவதீபன்
உதவி இயக்குநர்கள்: ‘சத்ரியன் சத்யராஜ், அருள் நித்தியானந்தம், சபரீஸ்வரன், கே. குருநாத் சேகர்
மக்கள் தொடர்பு: ஏ. ஜான்
திட்ட வடிவமைப்பாளர்: எல். விவேக் (பிரிம்ரோஸ் என்டர்டெயின்மென்ட்)
ஸ்ரீபதி 2023-ல் வெளியாகவுள்ள சில தமிழ்ப் படங்களில் கதைநாயகனாக கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சதீஷ் சரண் இயக்கத்தில் சைமன் கிங் இசையில் உருவாகியுள்ள ‘பெண்டுலம்’ திரைப்படத்தில் ‘அசுரன்’ படப் புகழ் அம்மு அபிராமி மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
மோகன் டச்சு இயக்கத்தில் கே.யு கார்த்திக் இசையில் உருவாகியுள்ள ‘அங்காரகன்’ என்கிற படத்தில் சத்யராஜ் மற்றும் மலையாள நடிகை நியா ஆகியோருடன் நடித்துள்ளார்.