இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது ஆங்கிலப் படம் பார்த்த உணர்வு வருகிறது! -‘Hi 5’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பெருமிதம்


தயாரிப்பாளர் இயக்குநர் பாஸ்கி டி. ராஜ், ”முதியவர்கள் இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து கொள்வதில்லை. முதியவர்களை புரிந்து கொள்ள சொல்வது தான் இந்தப்படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தை சொல்லியுள்ளோம்” என்றார்.
ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், ”இந்தப்படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையை சொல்கிறது. இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா அப்பாவை போற்ற வேண்டும். அம்மா அப்பாவை வணங்குபவன் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும். இந்த படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பேரரசு, ”சினிமாவில் இளைஞர்களை காட்டி வெற்றி அடைவது எளிதானது. ஆனால், வயதானவர்களை காட்டி வெற்றி அடைவது கஷ்டம் அதை செய்துள்ள நீங்கள் சாதிப்பீர்கள். முதுமைக்காலம் தான் நம் வாழ்வில் முக்கியமானது. நாம் அந்த காலகட்டத்தில் தான் நமக்கு பிடித்ததை செய்ய ஆசைப்பட்டு வாழ்கிறோம். முதுமைக் காலத்தின் வலிகளை சொல்லும் படத்தை தரும் இந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.