புஷ்பா படத்தின் ‘ஊ அண்டா வா’ போல ‘என்ஜாய்’ படத்தின் ‘சங்கு சக்கர கண்ணு’ பாடலும் பெரியளவில் ஹிட்டாகும்! -பாடகி இந்ரவதி செளகான் நம்பிக்கை

அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஊ அண்டா வா’ பாடல் பெரியளவில் ஹிட்டடித்தது. அந்த பாடலைப் பாடிய இந்ரவதி சௌகான் ‘என்ஜாய்’ என்ற படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். படத்தில் ‘சங்கு சக்கர கண்ணு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார்.
பாடலை விவேகா எழுதியிருக்கிறார். கே.எம். ரயான் இசையமைத்துள்ளார். பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
பாடலைப் பாடிய இந்ரவதி சௌகான், ”புஷ்பா படத்தின் ‘ஊ அண்டா வா’ பாடல் நாடு முழுக்க பிரபலமானதுபோல ‘சங்கு சக்கர கண்ணு’ பாடலும் பெரியளவில் வரவேற்பை பெறும். தமிழில் பாடுவதை மிகவும் விரும்புகிறேன். தொடர்ந்து தமிழில் பாட வாய்ப்புகள் வருகிறது” என்றார்.
‘என்ஜாய்’ படத்தை அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்க, எல்.என்.எச். கிரியேஷன் க. லட்சுமிநாராயணன் தயாரிக்கிறார்.