காதலிக்க கொடைக்கானல் போகிறீர்களா? எச்சரிக்க வருகிறது ‘இன்னும் ஒரு காதல் பயணம்.’

‘இன்னும் ஒரு காதல் பயணம்’ என்ற தலைப்பில் புதிய படமொன்று உருவாகிறது. அறிமுக இயக்குநர் ஆர்.டி. குஷால் குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குநர், ”தனிமையில் இனிமை காண செல்கிற காதல் ஜோடிகளுக்கு நேர்கிற விபரீதத்தையும் அதனால் அவர்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளையும் எடுத்துச் சொல்கிற படம் இது. இந்த படத்தில், கொடைக்கானலுக்கு செல்கிற காதலர்களுக்கு ஏற்படுகிற ஆபத்துகளை வரிசைபடுத்தி திரில்லாகவும், திகிலாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைத்திருக்கிறோம்” என்றார்.
இந்த படத்தில் நாயகனாக நவீன், நாயகியாக மலையாளப் படவுலகின் முன்னணி நடிகையான மெரின் பிலிப் நடிக்கிறார்கள்.
வில்லனாக பாடலீஸ்வரன் அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் காளையப்பன் பங்கேற்க, சார்லி, ஜி.பி.முத்து, ஜார்ஜ், சுவாமிநாதன், கும்கி அஸ்வின், மதன்பாப், ஜெய்ஆனந்த், கீர்த்தனா, தீபா, மகேந்திரன், காதல் அருண், தியா, மூர்த்தி என பலரும் நடிக்கின்றனர்.
‘மதுரை மணிக்குறவர்’ படத்தை தயாரித்த ‘காளையப்பா பிக்சர்ஸ்’ ஜி.காளையப்பன் இந்தப் படத்தை தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
கொடைக்கானலைச் சுற்றிய அழகான பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஞான கரவேல் பாடல்களையும், எஸ்.ஐ. சந்தோஷ்குமார் ஒளிப்பதிவையும், கணேஷ்பாபு படத்தொகுப்பையும், வாரன் சார்லி இசையையும், ராதிகா, விமல் , லோகு மூவரும் நடன பயிற்சியையும், பாப்புலர் பாபு சண்டை பயிற்சியையும் கே.எம்.நந்தகுமார் கலையையும், மகேந்திரன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
