இரண்டு வேடங்களில் ஜோஜு ஜார்ஜ்! பரபரப்பு கூட்டும் ‘இரட்டா’ படத்தின் டிரெய்லர்

மாநில விருதுகளோடு தேசிய விருதுகளையும் பெற்றுள்ள ஜோஜு ஜார்ஜ், வினோத் – பிரமோத் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘இரட்டா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன்  இயக்கியுள்ளார்.

ஜோஜு ஜார்ஜ் கரியரில் இந்த படம் இன்னொரு திருப்புமுனையாக அமையும் என்பதையும், இந்த படத்தின் கதாபாத்திரம் பல படங்களில் போலீஸாக நடித்திருக்கும் அவருக்கு இன்னொரு பவர்ஃபுல் போலீஸ் ரோலாக இருக்கும் என்பதையும் டிரெய்லர் உறுதிபடுத்துகிறது.

படத்தில் ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜோஜு ஜார்ஜுக்கு சொந்தமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படக்குழு விவரம்:-

ஒளிப்பதிவு – சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன்

பாடல் வரிகள் – அன்வர் அலி, முஹாசின் பராரி

இசை – ஜேக்ஸ் பிஜாய் ( மலையாளத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர்)

எடிட்டிங் – மனு ஆண்டனி

கலை – திலீப் நாத்

ஆடை வடிவமைப்பு – சமீரா சனீஷ்

ஒப்பனை – ரோனெக்ஸ்

சண்டைக் காட்சிகள் – கே.ராஜசேகர்

 

Leave a Reply

Your email address will not be published.