காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் அத்தனை அம்சங்களோடும் ‘குற்றம் புரிந்தால்.’ பிப்ரவரி மாதம் ரிலீஸ்!

கதாநாயகனாக ஆதிக் பாபு, கதாநாயகியாக பெங்களூரைச் சேர்ந்த அர்ச்சனா நடிக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்.’

‘நான் சிவனாகிறேன்’, ‘இரும்பு மனிதன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய டிஸ்னி இயக்கும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ்’ தயாரித்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”மர்ம நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு, மன உளைச்சலால் விரக்தி அடைந்த ஒருவன், தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் கலந்து, சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன்” என்கிறார் இயக்குனர் டிஸ்னி.

பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேதா இருவரும் எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு கே.கோகுல், இசை கே.எஸ்.மனோஜ்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ளது.

படத்தை, தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறத்தாழ 70 படங்களுக்கு மேல் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்த ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp