யோகிபாபு அதிர்ஷ்டசாலியா, இல்லையா? எதிர்பார்ப்பைத் தூண்டும் கதைக்களத்தில் ‘லக்கிமேன்.’

மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகிற, விமர்சனங்களில் பேசப்படுகிற கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து கதையின் நாயகனான நடித்து வருகிறார் யோகிபாபு.

அந்த வகையில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு ‘லக்கி மேன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதையும், எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் கதைக்களமாக கொண்டுள்ளது. படத்தின் கதையோட்டம், சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும்கூட ஒரு அற்புதமான அதிர்ஷ்டம்’ என்பதையும் சொல்கிறது. யோகிபாபு உண்மையில் ‘லக்கி மேன்’ தானா என்பது படத்தின் சுவாரஸ்யமான கிளைமாக்ஸ். ஃபீல் குட் காமெடி சப்ஜெக்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. தற்போது பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்தின் தொழில்நுட்பக் குழு:
இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்

கலை இயக்குநர் – சரவணன் வசந்த்
படத்தொகுப்பு: ஜி.மதன்
ஒலி வடிவமைப்பாளர்: தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர்: நந்தினி மாறன்
நிர்வாக தயாரிப்பாளர்: கே.மதன்
தயாரிப்பு நிர்வாகி: வி.லட்சுமணன்
போஸ்டர் வடிவமைப்பு: சபா டிசைன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One
சமூக ஊடக விளம்பரங்கள்: பாப்கார்ன்
தயாரிப்பு – திங்க் ஸ்டுடியோஸ்

23

Leave a Reply

Your email address will not be published.