வெற்றிப் பட இயக்குநர்களுடன் தொடர்ந்து கை கோர்க்கும் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்.’

‘சர்தார்’, ‘காரி’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து
‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லஷ்மண் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் மனு ஆனந்த். இவர், கடந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெற்ற ‘எஃப் ஐ ஆர்’ படத்தை இயக்கியவர். இந்த புதிய படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.
தொடர்ச்சியாக தரமான படங்களைத் தரும் நோக்கத்தில், மக்களை ஈர்க்கும்படியான வித்தியாசமான கதைகளைத் தரும் இயக்குநர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.
அந்த வகையில் கடந்த வாரம் இந்த நிறுவனம், ‘கொலைகாரன்’ படத்தையும் ‘வதந்தி’ வெப் சீரிஸையும் இயக்கி கவனம் ஈர்த்த ஆண்ட்ரூ லூயிஸை புதிய படத்துக்காக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.