மூவி வுட் தளத்தில் பொங்கல் வெளியீடாக புதிய படங்கள்…  ‘பீச்சாங்கை’,  ‘குருடன்’ & 13 சர்வதேச விருதுகளை வென்ற ‘லேபர்.’

மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தங்களது தளத்தில் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜன-15 முதல் ‘லேபர்’, குற்றநிலை மற்றும் ‘பீச்சாங்கை’ கார்த்தி நடித்துள்ள ‘குருடன்’ ஆகிய திரைப்படங்களை வெளியிடுகிறது.
ராயல் பார்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லேபர்’ படத்தை அறிமுக இயக்குனர் சத்தியபதி இயக்கியுள்ளார்.

முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்பிரமணியன், கயல்விழி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படத்தொகுப்பை கணேஷ்குமார் மேற்கொள்ள, நிகில் தினகரன் இசையமைத்துள்ளார்.

தமிழகத்தில் வாழும் கட்டிட தொழிலாளர்கள் வாழ்வியலை மையப்படுத்தி எதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு 13 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமா வரலாற்றில் கட்டிட தொழிலாளர்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட முதல் படம் இது. அதிக குளோசப் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்ட படமும் கூட.

பிரபல கேரள திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊமை விழிகள் இயக்குநர் அரவிந்தராஜ் ஆகியோர் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

பிரபலமான IMDB இணையதளம் இந்த படத்திற்கு 9.8/10 மற்றும் 5 / 5 என்கிற ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது இந்த படத்திற்கு கிடைத்துள்ள கூடுதல் பலம்.
ஆண்டு சந்தா 99 ரூபாய் செலுத்தினால் மூவி வுட் தளத்தில் வருடம் முழுதும் பல படங்களை பார்த்துக் கொள்ளலாம். ஒரு முறை படம் பார்க்க வேண்டும் என்றால் 40 ரூபாய் செலுத்தி பார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு.

மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் பற்றி:- இன்றைய சூழலில் பலரும் நல்ல படைப்புகளை உருவாக்கிவிட்டு அதேசமயம் சிறிய படம் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய அளவில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி தளங்கள் தான். அவற்றில் கூட பல தளங்கள் தற்போது படங்களை வாங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் நிலையில் மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்’கை’ கொடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp