ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கிய ‘மெட்ரோ’ ஷிரிஷ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ‘மெட்ரோ’ ஷிரிஷ் நடிப்புக்காக மட்டுமின்றி, நற்பண்புகளுக்காகவும், சமூக சேவைகளுக்காகவும் பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
கொரோனா கால கட்டத்தில் பல்வேறு மருத்துவ முகாம்களை தன் சொந்த செலவில் நடத்தினார்.
சமீபத்தில் தமிழ்நாட்டின் சிலம்பம் சாம்பியன்கள் இரண்டு பேருக்கு, சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கான உதவிகளை செய்தார்.இப்படி பல்வேறு விதங்களில் சமூக சேவைகளை தொடர்பவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேரின் குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களும் மளிகை பொருட்களும் வழங்கி மகிழ்வித்துள்ளார்.
‘மெட்ரோ’ ஷிரிஷ் பற்றி…
‘மெட்ரோ’ படத்தில் நடித்து, நல்ல நடிகர் எனும் பாராட்டை குவித்ததன் மூலம் ஷிரிஷ் என்ற தன் பெயரோடு ‘மெட்ரோ’ என்பதை இணைத்துக் கொண்டவர்.
தற்போது ‘மெட்ரோ’ ஷிரிஷ் இயக்குநர், தயாரிப்பாளர் கண்ணண் இயக்கத்தில், நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ஹாரர் காமெடி படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.