இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு எங்கள் படம் பிடித்திருந்தது! -‘மைக்கேல்’ பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் பேச்சு

சந்தீப் கிஷன் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்.’ ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ரொமான்ஸ் ஆக்சன் சப்ஜெக்டில் உருவாகியுள்ள இந்த படம் இந்தியாவின் பல மொழிகளில் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

அதையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். படக்குழுவினரோடு தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஞானவேல்ராஜா, சி.வி. குமார், எஸ். ஆர். பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் டீஸர், டிரெய்லர், பாடல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் தரமாக உருவானது. மைக்கேல் கதாபாத்திரம் அனைத்து எமோஷன்களையும், வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் கிஷன் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் ஆழமாகவும், ராவாகவும் இருக்க வேண்டும். அதற்காக கடின உழைப்பைச் சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார். சாம் சி.எஸ். சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்கும் தான் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர். இந்த படத்தில் ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார். கௌதம் மேனன் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது. அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

ரஞ்சித் ஜெயக்கொடி

படத்தின் நாயகன் சந்தீப் கிஷன், “இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. மொழி தாண்டி இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி வழங்கியுள்ளார். கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர். பிஸியான நேரத்திலும் அவர் எங்களுக்காக இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தைப் பார்த்தார், அவருக்கு பிடித்திருந்தது” என்றார்.படம் பற்றி…இந்த படத்தில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.

ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp