உள்ளூர் நடனக் கலைஞர்கள் 500 பேருக்கு வாய்ப்பு! நடனக் கலைஞர்கள் சங்கம் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படக்குழுவுக்கு பாராட்டு!

‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘மாவீரன்’ படத்தின் முதல் சிங்கிள், ‘சீன் ஆ சீன் ஆ’ பாடல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் அனைத்து இடங்களிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

30 விநாடிகளுக்கும் குறைவான இந்த க்ளிம்ப்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனின் எனர்ஜி மற்றும் துடிப்பான நடன அசைவுகள் அனைவரின் ஆர்வத்தையும் கவர்ந்துள்ளது.

இந்த பாடலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் இதில் இடம்பெற்றுள்ள அதிக எண்ணிக்கையிலான நடனக்கலைஞர்கள்தான்.

சென்னையைச் சேர்ந்த 500+ நடனக் கலைஞர்கள் மற்றும் 150+ குழுவினர் என கிட்டத்தட்ட 1000 பேர் வரை கலந்து கொண்டுள்ள இந்த பிரமாண்ட பாடல் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வெளியானது.

கபிலன் மற்றும் லோகேஷ் பாடல்களை எழுதியுள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த இந்த பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

இந்த நிலையில் 500 உள்ளூர் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்ததற்காக நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தபட்டது.

நடனக் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சின்னி பிரகாஷ், பாபு, மாரி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரை பாராட்டினர்.

சென்னையிலிருந்து முக்கிய நடனக் கலைஞர்கள் மற்றும் குழுவினரைப் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

எண்ணூரில் பிரம்மாண்டமான நடனக் கலைஞர்கள் மற்றும் கூட்டத்தை உள்ளடக்கிய இந்த மாஸ் நம்பர் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் சுனில் நடிக்கும் ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர்.

படக் குழுவினர்:

கலை இயக்கம்: குமார் கங்கப்பன் & அருண் வெஞ்சரமூடு,
சண்டைப்பயிற்சி: யானிக் பென்,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன், கூடுதல் திரைக்கதை & வசனம்: சந்துரு ஏ,
ஒலிக்கலவை: சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்,
ஒப்பனைக் கலைஞர்:ஷைட் மாலிக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

38

Leave a Reply

Your email address will not be published.