டிரெய்லருக்கு முன்பே ஸ்னீக் பீக்; ‘ஆண்டி-பிகிலி’ கான்செப்டில் பரபரக்கும் விளம்பரங்கள்… ‘பிச்சைக்காரன் 2’ படக்குழு சுறுசுறுப்பு!

பெரும் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று மீண்டும் உற்சாகத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

அவர் நடித்த ‘ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன் 2’ சிறந்த படமாக வெளிவரத் தயாராக இருக்கிறது. இயக்குநராக விஜய் ஆண்டனிக்கு இது முதல் படம் என்பதால், தனது முழு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நிறைய விஷயங்களை தயாரிப்புத் தரப்பு பிரமாண்டமாக திட்டமிட்டுள்ளது. படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு படத்தின் டீசர், டிரெய்லர் வருவதற்கு முன்பாகவே 4 நிமிட ஸ்னீக் பீக் (sneak peak) வெளியிட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘பிச்சைக்காரன்2’ பெற்றுள்ளது. மேலும், கதாநாயகனே இல்லாமல் வெளியாகி இருக்கும் முதல் ஸ்னீக் பீக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், வெளியான இந்த நான்கு நிமிட sneak peak பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு, அவர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

விஜய் ஆண்டனியின் ‘ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன்2’ படம் ஆரம்பித்ததில் இருந்து அது குறித்தான ஸ்பாட்லைட் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. ‘ஆண்டி-பிகிலி’ என்ற புரோமோஷனல் கான்செப்ட்டோடு ஆரம்பித்த இந்தப் படத்தின் அனைத்திந்திய சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது.

‘ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன் 2’ படத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக் குழுவினர்:

இயக்குநர்: விஜய் ஆண்டனி

லைன் புரொட்யூசர்: சாண்ட்ரா ஜான்சன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: நவீன் குமார்
தயாரிப்பு மேலாளர்: கிருஷ்ணபிரபு
ஒளிப்பதிவாளர்: ஓம் நாராயணன்
இசை: விஜய் ஆண்டனி
DI கலரிஸ்ட்: கௌஷிக் கே.எஸ்
படத்தொகுப்பு: விஜய் ஆண்டனி
அசோசியேட் எடிட்டர்: திவாகர் டென்னிஸ்
கலை இயக்குநர் : ஆறுசாமி
ஸ்டைலிஸ்ட்: ஜி அனுஷா மீனாட்சி
நடன இயக்குநர்கள்: ராஜசேகர், மகேஷ் மேத்யூ
எழுத்தாளர்கள்: விஜய் ஆண்டனி, கே பழனி, பால் ஆண்டனி

23

Leave a Reply

Your email address will not be published.