‘பகாசூரன்’ இயக்குநருக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வாழ்த்து!

இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பகாசூரன்’ படம் பிப்ரவரி 20; 2023 அன்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினருக்காக சென்னையில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.

இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் ஆர்.வி. உதயகுமார், பொருளாளர் பேரரசு உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.

படம் பார்த்தபின் இயக்குநர் மோகனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்ததோடு, ‘இது மக்கள் அனைவரும் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்க வேண்டிய விழிப்புணர்வு படம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டு பாராட்டினர்.

28

Leave a Reply

Your email address will not be published.