‘பரோல்’ சினிமா விமர்சனம்

லிங்கா, ஆர் எஸ் கார்த்தி, ஜானகி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பரோல்.

ஆராயி தன்னுடைய இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறாள். முதல் மகன் கரிகாலன் மீது ஆராயி உயிரையே வைத்துள்ளார். அதனால் இரண்டாவது மகன் கோவலனுக்கு தன்னுடைய அண்ணன் மீது கோபமும் பொறாமையும் உண்டாகிறது. இப்படியான நிலையில் தன்னுடைய அம்மாவை தவறாக பார்த்தவரை கல்லால் அடித்து கொலை செய்து விடுகிறார் கரிகாலன். அதனால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட அங்கு அவரை சிலர் தவறாக பயன்படுத்த அவர்களையும் கொலை செய்து விடுகிறார். வெளியில் இருக்கும் ஆராயி தன்னுடைய மகனை வெளியே கொண்டு வர போராட, கோவலன் தன்னுடைய அண்ணன் வெளியே வரக்கூடாது என திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் ஆராயி திடீரென உயிரிழக்க அதன் பிறகு என்னவானது? கரிகாலன் எப்படி பரோலில் வருகிறார் என்பது தான் படத்தின் கதை.

லிங்கா, ஆர்எஸ் கார்த்திக் என இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு பெரிய பலம் சேர்த்து உள்ளனர். ஜானகி சுரேஷ் அம்மாவாக உருக வைத்துள்ளார்.

இயக்குனர் துவாரக் ராஜா வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்து கவர்ந்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் பரோல் யதார்த்த சினிமாக்களின் மைல்கல்!

Rating: 3.5 / 5

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp