காமெடி ஹாரர்? இல்லை, மிரட்டலான ஹாரர்! ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் நடிப்பில் துவங்கியது புதிய படம்!

ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, டிரீம் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், என். ஹாரூன் இயக்கத்தில் மிரட்டலான ஹாரர் படம் உருவாகிறது. அதற்கான பூஜை இன்று நடந்தது.

நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களை உணரும்போது, அதெல்லாம் ஏன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் கிடைக்காமல் மிரள்வோம்; குழம்புவோம். அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இந்த படம் உருவாகிறது.படத்தில் ரோஷன் ஹீரோவாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது.

‘இந்த படம் வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், மிரட்டலான ஹாரர் படமாக இருக்கும். அப்படியான படங்களை விரும்புகிறவர்களுக்கு அருமையான விருந்தா இருக்கும்’ என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் படக்குழுவினர்.

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து,  இயக்கம் & தயாரிப்பு – என். ஹாரூன்
இசை: கே.எம். ரயான்
ஒளிப்பதிவு : விஜயகுமார் கிருஷ்ணா
எடிட்டர் : பிஜு .வ. டான் போஸ்கோ
ஸ்டண்ட்: ஃபயர் கார்த்திக்
கலை இயக்கம் : டான் பாலா
நடன இயக்குனர்: ரிச்சர்ட்
ஆடை வடிவமைப்பாளர்: ஏ. புஜ்ஜி
ஸ்டைலிஸ்ட் : பூர்ணிமா
மேக்கப் : மாரியப்பன்
பாடலாசிரியர்: விவேகா & குட்டி ரேவதி
மேனேஜர் : ஜெகதீஷ் கே. ஹெச்
ஸ்டில்ஸ்: மிலன் சீனு
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
நிர்வாக தயாரிப்பாளர்: கே.எஸ்.கே. செல்வா

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp