தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமியை மணந்தார்! திருப்பதியில் மணமக்கள் உற்சாகம்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.

திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கருக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

தனது திருமணம் குறித்து பேசிய ரவீந்தர் சந்திரசேகரன், ”மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எனக்கு மகாலட்சுமியே  வாழ்க்கைத் துணையாக கிடைத்துள்ளார்” என்றார்.

”ரவீந்தர் சந்திரசேகரன் எனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் மகாலட்சுமி சங்கர்.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp