33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம். முதல் பார்வையை சபரிமலையில் வெளியிட்டார் மேல் சாந்தி!

தமிழ் சினிமா வரலாற்றில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம் மிக பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் ‘ஶ்ரீ சபரி ஐயப்பன்’ என்ற பெயரில் இந்த படம் தயாராகிறது.

இந்த படத்தில் கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சபரிமலை மாலை அணியும் வில்லியாக சோனாவும் படத்தின் குரு சாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில்லனாக அறிமுகம் ராஜாசாமி மிரட்டி இருக்கிறார். கஞ்சா கருப்பு, சாம்ஸ் முத்துக்காளை, ராஜேந்திரநாத், உடுமலை ரவி, மங்கி ரவி, வடிவேலு கணேஷ், விஸ்வ காந்த், லதா, சின்னாளப்பட்டி சுகி, சுமதி, ஸ்வேதா, என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை (First Look Poster) சபரிமலையில் சபரிமலை மேல் சாந்தி வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தி ஆசீர்வதித்தார்!

படம் குறித்த கூடுதல் தகவல்கள்…

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி இருக்கிறார் ராஜா தேசிங்கு. மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெறக்கூடிய அளவில் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் பெரிதும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மணிகண்ட சாமிகள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் 6 பாடல்கள் வீரமணி ராஜு, சீர்காழி சிவசிதம்பரம், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, முத்து சிற்பி ஆகியோரின் கம்பீர குரலில் பிரமாண்டமாக பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.

படத்தின் காட்சிகள் வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, பொள்ளாச்சி, பாலூர், கரூர், ஆவடி மற்றும் சபரிமலை பகுதிகளில் மிக பிரமாண்டமாக அரங்கு அமைத்து படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கார்த்திகை 1-ம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

படக்குழு:-
ஒளிப்பதிவு – மகேஷ் மகாதேவன்
இசை – பாபு அரவிந்த்
எடிட்டிங் – எஸ்பி அகமது
ஆர்ட் டைரக்ஷன் – ராஜா தேசிங்கு
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp