பஷீரின் நடிப்பை பார்த்து கண்கலங்கி பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா! ‘தேசிய தலைவர்’ படத்திற்காக டப்பிங் பேசியபோது நெகிழ்ச்சி.

இந்த படத்தில், தேவர்மீது புனையப்பட்ட கொலை வழக்கை விசாரித்து, தேவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பு கூறும் நீதிபதி கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார்.
அதற்காக டப்பிங் பேசியபோது இயக்குநர் அரவிந்தராஜை வெகுவாக பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா, தேவராக நடித்துள்ள பஷீரை, ‘இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தமிழக மக்கள் உன்னை புகழின் உச்சிக்கு கொண்டு செல்வார்கள்’ என்று சொல்லி கண்கலங்கி பாராட்டினார்.