விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘தளபதி 67.’ ஷூட்டிங் தொடங்கி ஒரு மாசமாச்சு!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான மாஸ்டர், வாரிசு படங்களைத் தயாரித்திருந்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைகிறது. இந்த புதிய படத்திற்கு ‘தளபதி 67’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வருகிற லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய்யின் ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ படங்களைத் தொடர்ந்து இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும். படத்தின் தொழில்நுட்பக் குழு:-
ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா
ஆக்ஷன் – அன்பறிவ்
எடிட்டிங் – பிலோமின் ராஜ்
கலை – என். சதீஸ் குமார்
நடனம் – தினேஷ்
வசனம் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார் & தீரஜ் வைத்தி
நிர்வாகத் தயாரிப்பாளர் – ராம்குமார் பாலசுப்ரமணியன்.
.
