இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது! -‘தீர்க்கதரிசி’ பட விழாவில் நாயகன் அஜ்மல் பேச்சு

சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோர் நடிக்க, பி.ஜி. மோகன் – எல். ஆர். சுந்தரபாண்டி ஆகிய இருவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் படம் ‘தீர்க்கதரிசி.’

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் சத்யராஜ்,“ஒரு படத்தின் ஹீரோ என்பது ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது” என்றார்.

படத்தின் இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி, பல ஆண்டுகள் கழித்து இந்த படம் மூலம் மீண்டும் இயக்குநராக வந்திருக்கிறேன். இந்த படம் பரபரப்பான பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும்” என்றார்.

இயக்குநர் பி.ஜி. மோகன், “இது எனது முதல் படம்.  கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

நடிகர் அஜ்மல், “சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை சொல்லும்போதே இந்த படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும்” என்றார்.

விழாவின் சிறப்பு விருந்தினர் இயக்குநர் பேரரசு,“இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. இது ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. சத்யராஜ் சாரின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

விழாவில், இந்த படத்தில் நடித்துள்ள துஷ்யந்த், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், ஆர்.கே. செல்வமணி, ஹரி, பி ஜி மோகன், நடிகர்கள் ராம்குமார் சிவாஜிகணேசன், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் படக்குழுவை வாழ்த்தி பேசினார்கள்.

28

Leave a Reply

Your email address will not be published.