கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

ஏராளமான ரசிகர்களைச் சம்பாதித்திருக்கிற இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, பிறந்தநாளான இன்று சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ‘Battle Fest 2022’ எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க தனது இசையில் வெளியான ‘மனசே..’ என்ற சுயாதீன ஆல்பத்தின் பாடலை பாடினார். மாணவிகள் கைதட்டி அவரை பாராட்டினர்.
”இன்று சர்வதேச இதய நாள் என்பதாலும், துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதாலும், அவர் எழுதிய ’மனசே..’ எனும் பாடல் பாடியது பொருத்தமாக இருந்தது” என கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.