படம் ஜெயித்தவுடன் முதல்வர் சீட்டுக்கு ஆசைப்படாதீர்கள்! -‘உன் கூடவே’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

புதுமுகங்கள் நடிப்பில் காதல் கீதமாக, கோகுல் பிரபு இயக்கத்தில், எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில், டிரென்ட் மியூசிக் (Trend Music) நிறுவனத்தின் பங்களிப்போடு உருவாகியுள்ளது ‘உன் கூடவே’ ஆல்பம் பாடல்.

தமிழ் சினிமாவில் கால்பதிக்கிற Revgen Film Factory நிறுவனம் முதல் படத்தை எடுப்பதற்கு முன்னோட்டமாக இந்த பாடலை தயாரிக்க முன்வந்தது.

இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதத்தில் உருவாகியுள்ள இப்பாடலின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் கோகுல் பிரபு, ”படம் இயக்கலாம் என்றிருந்தபோது, தயாரிப்பாளர் தான், முதலில் நாம் ஒரு பாடல் செய்யலாம் என்றார். ஜோன்ஸை அறிமுகப்படுத்தினார். அவரது குரலை கேட்டவுடன் அவரையே பிக்ஸ் பண்ணிவிட்டோம். மோகன்ராஜ் அழகான வரிகள் தந்தார். விஜி மாஸ்டர் எங்களுக்காக வந்து இந்தப்பாடலின் நடனத்தை அமைத்து தந்தார். சிந்தூரி இந்த பாடல் எடுக்கும் நேரத்தில் சின்ன ஆக்ஸிடெண்ட் ஆனால் அதை பொருட்படுத்தாமல் மருந்து எடுத்து கொண்டு சூட்டிங்கில் கலந்துகொண்டார். மிக நன்றாக செய்துள்ளார். பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் தேவகுமார், ”கார்ப்பரேட் துறையிலிருந்து வந்து இங்கு விழாவில் கலந்துகொள்வது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. உண்மையில் இந்த பாடல் உருவாக இயக்குநர் தான் காரணம். உதயகுமார் சாருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அவரைப்போல எனக்கும் எஸ்பிபி பிடிக்கும். பட்டாசு மாதிரியான இயக்குநர் பேரரசு வந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் உழைப்பை உண்மையாக தந்தால் கண்டிப்பாக அதில் ஜெயிக்கலாம். நடிகர் லெனின் உண்மையாக உழைக்கிறார். அவருக்கும் நடிகை சிந்தூரிக்கும் என் வாழ்த்துக்கள். ஜோன்ஸ் ரூபர்ட் மிகச்சிறப்பான பாடலை தந்துள்ளார்” என்றார்.

இயக்குநர் பேரரசு, ”தயாரிப்பாளர் தேவகுமார் சினிமா மீது காதல் கொண்டவராக இருக்கிறார். நாயகன் லெனின் பெயரே நன்றாக உள்ளது. பாடலில் நன்றாக நடித்துள்ளார். படம் ஜெயித்தவுடன் முதல்வர் சீட்டுக்கு ஆசைப்படாதீர்கள். இப்போது அது தான் நடக்கிறது. நாயகி நன்றி மட்டுமே சொன்னார் இந்தகாலத்தில் நன்றியோடு இருப்பது பெரிய விசயம். இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட் சூப்பராக பாடியுள்ளார். இயக்குநர் ஒரு அழகான பாடலை தந்துள்ளார். இன்றைய சினிமாவில் சின்ன படங்களாகவே இருந்தாலும் பெரிய நிறுவனம் வெளியிட்டால் தான் வெற்றி பெறுகிறது. இந்தப்படத்தையும் ரெட் ஜெயண்ட் வாங்குமென நம்புகிறேன் இந்தக்குழு வெற்றிபெற என் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் அர்.வி. உதயகுமார், ஒரு பாடல் தானே இந்த விழாவிற்கு வர வேண்டுமா என யோசித்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தபிறகு மிகப்பெரிய மகிழ்ச்சி. மிக சிறந்த ஒரு பாடலை எடுத்துள்ளார்கள். பாடலில் நாயகனும் நாயகியும் நன்றாக ஆடியுள்ளார்கள். இன்னும் கொஞ்சம் உழைத்தால் திரையுலகில் மிகச்சிறப்பான இடத்தை பிடிப்பார்கள். இந்தக்குழு 4 நிமிட பாடலுக்கு மிககடினமான உழைப்பை தந்துள்ளார்கள். ஒரு விசயத்தை அர்ப்பணிப்போடு செய்யும்போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர், தயாரிப்பாளர் லெனின், ”இங்கு பெரிய பிரபலங்கள் வந்து வாழ்த்துவது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இந்தக்குழு மிகச்சிறப்பான உழைப்பை தந்துள்ளார்கள். என்னை சுற்றி நிறைய நல்லவர்கள் பாசமானவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் அன்புக்கு நன்றி. ஹைஸ்பீட் ஷாட் என்றால் என்னவென்றே தெரியாது ஆனால் என்னை வைத்து இந்தப்பாடலின் நடனத்தை ஹைஸ்பீட் ஷாட்டில் எடுத்தார்கள். ஜாலியாக இதை எடுக்க வேண்டும் என்று தான் இப்பாடலை எடுத்தோம். இப்போது எல்லோரும் பாராட்டுவது மகிழ்ச்சி” என்றார்.

தொழில் நுட்பக்குழு:-
ஒளிப்பதிவு : சதீஷ் மெய்யப்பன்
நடன அமைப்பு : விஜிசதீஷ்
இசை : M S ஜோன்ஸ் ரூபர்ட்
எடிட்டர் – பவித் ரன் K
கலை இயக்கம் : L கோபி
பாடல் : மோகன்ராஜன்
உடை வடிவமைப்பு : கார்த்திக்
மேக்கப் – ஜெஷாந்தி & ஜாஸ்மின் ஆண்டனி
தயாரிப்பு – லெனின் , தேவகுமார்

Leave a Reply

Your email address will not be published.