நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் உயிரோட்டமான சம்பவங்களின் தொகுப்பாக ‘உயிர்த் துளி.’

கதாநாயகி இல்லாமல், கதையே நாயகனாக கொண்ட உயிரோட்டமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகிறது ‘உயிர்த் துளி’ திரைப்படம்.

நாஞ்சில் பி.சி.அன்பழகன்

‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ படங்களுக்குப் பிறகு  நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்கும் படம் இது.

நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திர சேகர், வாகை சந்திர சேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஸ்ரீ, பிரியதர்ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ சங்கர், மதுரை முத்து, பவர்ஸ்டார், அருள்மணி, போண்டா மணி, ரெங்கநாதன், வையாபுரி, ஜெயமணி, தாம்ஸன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கொடைக்கானலில் நடந்த சம்பவத்தை, கொடைக்கானலிலேயே ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்கவிருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் குழு:- எடிட்டிங் லெனின், ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, ஸ்டண்ட் கனல் கண்ணன், இசை ஜாட்ரிக்ஸ், நடனம் ராதிகா, ஆர்ட் பாலமுருகன், டிசைன் மேக்ஸ், இணை இயக்கம் செல்வம் அய்யம் பெருமாள்,
தயாரிப்பு நிர்வாகம் விஜயமுருகன், யூனிட் காவ்ய லட்சுமி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp