‘வாரிசு’ படம் ஓடும் தியேட்டர்களில் நெஞ்சை பதறவைக்கும் ‘வர்ணாஸ்ரமம்’ படத்தின் டிரெய்லர்!

ஆணவக்கொலை பற்றிய கதைக்களத்தில் நெஞ்சைப் பதறவைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது ‘வர்ணாஸ்ரமம்’ என்ற திரைப்படம்.

சிந்தியா லெளர்டே கதையின் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ராமகிருஷ்ணன், ‘பிக்பாஸ்’ அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பி.ரத்னவேல், விசை மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் ‘தளபதி’ விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ படம் வரும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘வாரிசு’ படம் ரிலீஸாகிற தியேட்டர்களில் ‘வர்ணாஸ்ரமம்’ படத்தின் டிரெய்லர் திரையிடப்படவிருக்கிறது.

தமிழ் படங்களில் பாடுவதற்காக சென்னை வந்த அமெரிக்க பாடகி சிந்தியா லௌர்டே முதற்கட்ட வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதற்காக படத்தயாரிப்பில் ஈடுபட்டார். அதற்காக ‘சிந்தியா புரொடக்சன் ஹவுஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். சுகுமார் அழகர்சாமியின் கதையைத் தேர்வு செய்து அவரையே படத்தை இயக்கச் சொன்னார். கதையின் நாயகியாக நடித்து, தனக்கு பிடித்தமான பாடலையும் பாடி, படத்தையும் தயாரித்துள்ளார்.

தீபன் சக்கரவர்த்தி இசையையும், உமாதேவி பாடல்களையும், கா.சரத்குமார் எடிட்டிங்கையும், பிரவீணா.எஸ். ஒளிப்பதிவையும், ராஜேஷ்கண்ணன் சண்டை பயிற்சியையும், புத்தமித்திரன் கலையையும், ஏ.பி.ரத்னவேல் நிர்வாக தயாரிப்பையும், எம்.பாலமுருகன் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர்.

18

Leave a Reply

Your email address will not be published.