‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தை இயக்கிய சதீஷ் ஜி. குமார் இயக்கத்தில் வி. கார்த்திகேயன் நடிக்கும் சூரகன்.’ படப்பிடிப்பைத் துவக்கி வைத்த இயக்குனர் பாக்யராஜ்!

அஹம் பிரம்மாஸ்மி’ படத்தை இயக்கிய சதீஷ் ஜி. குமார் இப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்கிறார்.
கிரைம் திரில்லராக உருவாகும் இந்த படத்தின் கதாநாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்டு அடித்து துவக்கி வைத்து படக்குழுவை வாழ்த்தினார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:-
எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு இயக்கம் – சதீஷ் G.குமார்
ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்ஸ்
இசை – அச்சு ராஜாமணி
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – ஶ்ரீதர்
மேக்கப் – பிரின்ஸ் பிரேம்
காஸ்டுயும் டிசைனர் – கீர்த்தி வாசன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)