இந்த படம் காதலிப்பவர்களுக்கும், காதலிக்க நினைப்பவர்களுக்கும் பிடிக்கும்! -‘என்னை மாற்றும் காதலே’ பட இயக்குநர் நம்பிக்கை

கோமலி வழங்க ஆர்.ஆர். கிரியேட்டிவ் கமர்ஷியல் நிறுவனம் சார்பில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘என்னை மாற்றும் காதலே’ திரைப்படத்தை என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்துள்ளார்.

புதுமுகங்கள் விஷ்வ கார்த்திகேயா, கிருத்திகா சீனிவாஸ் ஜோடியுடன் அலி, துளசி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஜார்ஜ் மரியன், லொள்ளுசபா சாமிநாதன், டேனியல் வாசுதேவன், கிருஷ்ணவேணி, நாராயணராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வசனத்தை சதீஷ் எழுத , பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ்செல்வன் இருவருடன் இணைந்து ஒரு பாடல் எழுதியுள்ள ரதன் படத்திற்கு இனிமையாக இசையமைத்துள்ளார். கல்யாண் பி. ஒளிப்பதிவையும், எஸ்.ஜெ.சிவகிரண் படத்தொகுப்பையும், கோபி..பி. நடன பயிற்சியையும், ஹசரத்பாபு, சீனிவாசராஜு இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும், நபா சண்டை பயிற்சியையும், சந்திரமெளலி கலையையும் கவனித்துள்ளனர்.

திரைக்கதை அமைத்து ஜலபதி.பி. இயக்கி உள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது, ” கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக பட்டணம் வருகிறான் நாயன்.அங்கு நாயகியை பார்க்கிறான். அவளை விடாமல் துரத்தி காதலை வெளிப்படுத்த துடிக்கிறான். அவளோ தனக்கு நிறைய லட்சியங்கள் இருப்பதாக கூறி அவன் காதலை நிராகரிக்கிறாள். இதனால் நாயகன் எடுக்கும் முடிவினால் அதிர்ச்சியின் எல்லைக்கே செல்கிறாள் நாயகி. அதன்பிறகு நடைபெறும் திடுக்கிடும்” சம்பவங்கள் அவளை எப்படி பாதித்தது? அதிலிருந்து அவள் மீண்டாளா? மாட்டினாளா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். காதலிப்பவர்களுக்கு மட்டுமல்ல , காதலிக்க நினைப்பவர்களுக்கும், காதலிக்காமல் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்த படம்பிடிக்கும்” என்று கூறினார்.

திருப்பதி, புத்துார், பள்ளிப்பட்டு, கேரளா, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp