தமிழகத்தில் மனதை உலுக்கிய சம்பவத்தின் அடிப்படையில் உருவான ‘181.’ தியேட்டர்களில் வரவேற்பு!

இயக்குநர் இசாக். எதை செய்தாலும் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
‘அகடம்’ என்ற திரைப்படத்தை 2 மணி நேரம் 3 நிமிடம் 30 விநாடிகள் SINGLE SHOT-ல் என்ற எடுத்து ‘கின்னஸ் சாதனை’ படைத்தவர்.
பின்னர், ஆரி நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அவர் இப்போது, புதிய முயற்சியாக 12 மணி நேரத்தில் திரைக்கதை எழுதி புது முகங்களை வைத்து ‘181‘ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
‘சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ்’ பி. பி. எஸ். ஈச குகா தயாரிக்க, புதுமுகங்கள் ஜெமினி, ரீனா கிருஷ்ணன், காவியா ,விஜய் சந்துரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஷமீல்.ஜே இசையமைத்திருக்கிறார்.
படம் டிசம்பர் 16;2022 அன்று வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.
படம் பற்றி இயக்குநர் இசாக், ”இது திகில் படம் என்றாலும், சமீபத்தில் தமிழக மக்களின் மனதை உலுக்கிய உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்து படத்தை எடுத்திருக்கின்றோம்.
பல தடைகளைத் தாண்டி படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சென்சார் சான்றிதழுக்காக மூன்று மாதகாலம் போராடி, பிறகு மேல் முறையீட்டில் A சான்றிதழ் கிடைத்தது.
படத்தை பார்த்த, மேல் முறையீட்டு அமைப்பின் தலைவர் நடிகை கெளதமி படத்தை பாராட்டினார்” என்றார்.
படக் குழு:
எழுத்து , இயக்கம் – இசாக்
ஒளிப்பதிவு – பிரசாத்
படத்தொகுப்பு – எஸ். தேவராஜ்
கலை – மணிமொழியான் ராமதுரை
சண்டைப் பயிற்சி -கோட்டி
மக்கள் தொடர்பு – செல்வரகு