‘ஜெயா டிவி’யின் ‘காமெடி பஜார்’… குவிகிறது வரவேற்பு!

ஞாயிறுதோறும் மாலை 4.30 மணிக்கு ஜெயா டிவியில் காமெடி பஜார் என்ற
புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சினிமாவில் இடம்பெறக்கூடிய காமெடி காட்சிகளை வைத்து, புதுமுக வளரும் நடிகர்களை கொண்டு இந்நிகழ்ச்சி உருவாக்கப்படுகிறது. இதில் ஒரு கதைக் களத்தை தேர்ந்தெடுத்து அதில் உள்ள காமெடியை சினிமா காட்சிகளுடன் வடிவமைத்து காட்டப்படுகிறது. நிரஞ்சன் அன்பரசி, பிரியா ,ஜான் உள்ளிட்ட வளரும் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
