150 பேருக்கு கல்வி உதவித் தொகை; அசத்தலான அசைவ விருந்து… மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டிஸ்’ நிறுவனரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகச் செயலாளரும், ‘மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட். காம்‘ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான, Rtn திரு.வி. ஜெயச்சந்திரன் அவர்களின் 41-வது பிறந்தநாளை முன்னிட்டு 150 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சென்னை, வடபழனி சிகரம் ஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத்தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, ஊக்கப் பயிற்சியாளர் நந்தகுமார் தொகுத்து வழங்கினார். மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் இயக்குநர், திரு. சி.வி. ருநானா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
திருமதி.பாலிகா ஜெயச்சந்திரன், ஜே.ஜீவஸ்ருதி, ஜே.ஜஸ்வந்தி, திருமதி.ஹேமலதா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் ஊழியர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையாளர் டாக்டர். ஆர்.பிரதாப்குமார், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி (ADGP) திரு.ராமசுப்பிரமணியம், நடிகர் ‘பிக்பாஸ்’ பரணி, டாக்டர் சி.எம்.கே.ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினர்!
சிறப்பு அழைப்பாளர்களாக FAIRA கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் திரு எஸ்.ராஜசேகர், திரு ஆர்.சந்திரசேகர், திரு ஜி.ரமேஷ், திரு ஆர்.கார்த்திக், திரு.பாபு, திரு பி.உதயகுமார், திரு. எஸ்.வி.ரவி, திரு.கே .பொன்குமார், திரு.பாஸ்கர், திரு.மோகன், திரு.சக்திவேல், திரு ஏ.முனீஸ்வரன், திரு.சிவகுமரன் மற்றும் ரோட்டரி கிளப்பை சேர்ந்த நண்பர்கள் முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், மக்கள் நலப்பேரவை’யை சார்ந்த பொறுப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உணவருந்திச் செல்வதற்கு சிறப்பான முறையில் (அசைவ உணவு) ஏற்பாடு செய்யப்படிருந்தது!
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் FAIRA மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவிக்க, நிகழ்வு இனிதே முடிந்தது!