‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…’ இலங்கை கவிஞரின் பாடலுக்கு குவியும் வரவேற்பு!

இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்‘ என்ற பாடல் யூ டியூபில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக இப்பாடலை எழுதியுள்ளார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்.
பாடலுக்கு இசையமைத்துள்ளார் இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக பாடலைப்பாடியுள்ளார் பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க.
மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொத்துவில் அஸ்மின், விஜய் ஆண்டனியின் ‘நான்’ படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.