ஈஷான் நடிப்பில், ஜவஹர் மித்ரன் இயக்கும் ‘அரியவன்.’ மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

தனுஷ் நடிப்பில், ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான ‘அரியவன்’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி (பிப்ரவரி 12; 2023) வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
இந்த படத்தில் அறிமுக நாயகன் ஈஷான், அறிமுக நாயகி ப்ராணலி நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளிவர உள்ளது.
இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தை வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முழுவீச்சில் வேலை செய்து வருகிறது.
படக்குழு:
கதை – மாரிச்செல்வன்
தயாரிப்பு – எம் ஜி பி மாஸ் மீடியா
எடிட்டிங் – மா தியாகராஜன்
ஒளிப்பதிவு – கே எஸ் விஷ்ணு ஸ்ரீ
