‘அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்’. குழந்தைகளோடு படம் பார்த்த இயக்குநர் மிஷ்கின்!

தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு ‘அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்’. அதன்படி முதலாவதாக சாப்ளினின் The Kid திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம் சில்ரென் ஆஃப் ஹெவன் (Children of Heaven).

இன்று (செப்டம்பர் 1; 2022) இயக்குனர் மிஷ்கின் வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் அப்படத்தைப் பார்த்து பின்பு பேசினார். மிஷ்கினிடம் குழந்தைகள் கேள்விகள் கேட்க, நீண்ட கலந்துரையாடல் நடந்தது. உரையாடலின் இடையில் ஆரம்பித்த மழை கடைசி வரை பெய்ய, “இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்” என்று உரையை முடித்தார் மிஷ்கின்.

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp