பத்திரிகையாளர்கள் 1000 பேருக்கு தலைக்கவசம்! முன்னுதாரண நிகழ்வாய் கிங் மேக்கர்ஸ் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ். இராஜசேகர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர். எஸ். ராஜசேகர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் 1000 பேருக்கு தலைக்கவசம் வழங்கும் விழா சென்னை தி. நகர் வாணிமகாலில் நடந்தது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் (Faira) தேசியத் தலைவர் ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில் நடந்த இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் அவர்களின் ஆலோசகரும் விஞ்ஞானியுமான பொன்ராஜ, வெள்ளைச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார்கள்!
மேலும் இவ் விழாவில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியிட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் லயன் டாக்டர் எஸ். இராஜேந்திரன்,
தமிழ் நாடு பத்திரிகை யாளர் சங்கத்தின் தலைவர் டி. எஸ். ஆர் சுபாஷ்,
தஞ்சை தமிழ் பித்தன், ஊடக உரிமைக்குரல் சங்கத்தின் தலைவர் தமிழன் வடிவேல்,
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் குமார், தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் குரு, செய்தித்துறை யூனியன் தலைவர் ஜூபிடர் ரவி, AIJU தலைவர் எஸ். ஆர். ரவிக்குமார், திரை தீபம் மதி ஒளி ராஜா,
பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர் யூனியன் தலைவர் திவான் மொய்தின், அதிரடி குரல் மாத இதழ் ஆசிரியர் ஜெயகாந்தன், ஆல் இந்திய பிரஸ் கிளப் ரஞ்சித் பிரபாகர்
மற்றும் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள், நிருபர்கள் புகைப்படக் கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
AIPMA தேசியத் தலைவர் வேல்முருகன் வறவேற்புரை வழங்கினார் Faira தேசியப் பொருளாளர் டாக்டர் ஆர். சந்திரசேகர், Faira தேசிய செயலாளர் Rtn. வி. ஜெயசந்திரன், தேசிய செயற்குழு தலைவர் டாக்டர் ஜி. ரமேஷ்,
தேசிய ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் ஜி.இராவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன்,
Hitec ஆர். மோகன், ‘தின தொடர்’ ஏ. ஆண்ரூஸ் டேவிட், ‘செய்தி அலசல்’ அ.நெல்சன் கென்னடி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்!
