மனிதநேய தொண்டமைப்புக்கும், சிறந்த தொழில் நிறுவனத்துக்கும் ‘ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ விருதுகள்! தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று வழங்கினார்!

சென்னை ஜனவரி 23; 2023: 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க ‘ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ மனிதநேயத்தோடு செயல்படுகிற நிறுவனங்களையும், சமூக சேவையாற்றும் தன்னார்வ தொண்டமைப்புகளையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.கடந்த காலங்களில் டாக்டர் சாந்தா, கேன்சர் இன்ஸ்டிடியூட் / திரு. சி.கே. ரங்கநாதன், கவின்கேர் /
டாக்டர் பி.சி.ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனை /
டாக்டர் ஆனந்த், ஐ.ஐ.டி. மெட்ராஸ் / திரு. சந்தானம், செயிண்ட் கோபேய்ன் / திரு. கே.பி. ராமசாமி, கே.பி.ஆர். மில்ஸ் / டாக்டர் என். காமகோடி, சிட்டி யூனியன் வங்கி லிட் /திரு. சி. பார்த்திபன், கேப்ளின் பாயின்ட் லேபரட்டரீஸ் லிமிடெட் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கெளரவித்துள்ளது.

அந்த வரிசையில் இந்த வருடம் ‘ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ தனது சேம்பர் தினத்தைக் கொண்டாடிய நிகழ்வில் விருதுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

23.1. 2023 அன்று நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசின் ஊரகத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர், மாண்புமிகு த.மோ. அன்பரசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

1980-களில் தொடங்கப்பட்டு இன்று 12,0000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 160 கிளைகளுடன் விரிந்து பரந்துள்ள அடையார் ஆனந்தபவன் வணிகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான விருது வழங்கப்பட்டது. சமூக சேவைக்கான மனிதநேய விருது, செல்வி ப்ரீத்தி சீனிவாசனால் 2013-ம் ஆண்டு திருவண்ணாமலையில் தொடங்கப்பட்ட சோல்ஃப்ரீ தன்னார்வ அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

அடையார் ஆனந்த பவன் சார்பில், நிர்வாக இயக்குனர்கள் திரு கே. டி. வெங்கடேசன் மற்றும் திரு. கே.டி. சீனிவாச ராஜா ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.

சோல்ப்ரீ அமைப்பின் சார்பில், அதன் அறங்காவலர், செல்வி ப்ரீத்தி சீனிவாசன் விருதை பெற்றுக்கொண்டார்.

விருது பெற்றவர்களின் சேவைகளைப் வாழ்த்திப் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், விருது பெற்றவர்கள் தத்தம் துறைகளில் சிறந்து விளங்கிவருவதைப் பற்றி குறிப்பிட்டு சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என குறிப்பிட்டார்.

தவிர, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சீரான தலைமையில், தமிழகத்தின் சிறு மற்றும் குறுதொழில்களின் அதிவேக வளர்ச்சிக்காக அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்ச்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய ஹிந்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் வ. நாகப்பன்,  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் MSME துறையின் மிக முக்கியமான முயற்சியான ஒற்றைச் சாளர’ இணையம் முயற்சியை இந்துஸ்தான் வர்த்தக சபை சார்பாக பாராட்டினார். பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து சிறு/குறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை துவங்குவதற்குத் தேவையான ஒப்புதல்கள், முன் அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்கள் (NoCs) ஆகியவற்றைப் பெறுவதை இந்த ஆன்லைன் ஒற்றைச் சாளர முறை எளிமையாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

வரும் ஆண்டுக்கான, சேம்பரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள விஜய் பி. சோர்டியா நன்றியுரை வழங்க விழா நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp