கலைஞர் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி ‘லிட்டில் சூப்பர் ஹீரோஸ்.’ நடிகர் கருணாகரன் தொகுத்து வழங்குகிறார்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் கருணாகரன், கலைஞர் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி லிட்டில் சூப்பர் ஹீரோஸ்.’

இளம் திறமையாளர்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, ஜூன் 5 முதல் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்.  அந்த திறமையை சரியான நேரத்தில், சரியான வழியில், சரியாக பயன்படுத்தவில்லை எனில் அது தன் மதிப்பை அடையாது. இப்படி இருக்க, குழந்தைகளாக நம் முன் வலம் வரும் இளம் திறமையாளர்களின் திறமைகளை உலகறியச் செய்யும் விதமாக நமது கலைஞர் தொலைக்காட்சியில், முற்றிலும் மாறுபட்ட புத்தம் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

வீட்டில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளின் அசாத்திய திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக உருவாகும் இந்த நிகழ்ச்சியின் மூலம், பலதரப்பட்ட வித்தியாசமான திறமைகள் உலகத்திற்கு தெரியப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published.