கேரளாவில் நடந்த அழகிப் போட்டியில், பட்டம் வென்றார் திருமணமான வைஷாலி!

‘மிஸஸ் சவுத் இந்தியா’ என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டி கேரளாவில் நடைபெற்றது.

பிகாசஸ் குளோபல் லிமிடெட் (Pegasus global Ltd) நிறுவனம் நடத்திய இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மூன்று சுற்றுகளில் 14 பேர்வரை கலந்து கொண்டார்கள்.

மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களில் வைஷாலி இரண்டாம் இடத்தை பிடித்தார். அவருக்கு மிஸஸ் இன்ஸ்பயரிங் என்ற துணை பட்டமும் வழங்கப்பட்டது.

தனக்கு கிடைத்த வெற்றி குறித்து வைஷாலி பேசியபோது, ”திருமணமான ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கான அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும், அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு பெண்களும் எடுத்து தங்களுக்கு பிடித்த துறையில் பிடித்த பணியை செய்ய வேண்டும். அந்த நோக்கத்தில்தான் நான் என்னையே நேசிக்க தொடங்கி என் வாழ்வில் நான் சந்தித்த இன்னல்களைக் கடந்து இந்த வெற்றியை அடைந்தேன். இது வெறும் தொடக்கம்தான் முடிவு அல்ல.

எனக்கு எப்போதுமே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு. அதனால் 2018-ம் ஆண்டில் புற்றுநோயாளிகளுக்காக முடியை தானமாக வழங்கினேன். என்னைப் பார்த்து பலரும் புற்று நோயாளிகளுக்காக தங்களது முடியை தானம் செய்தார்கள். அது எனக்கு பெருமையாக இருந்தது” என்றார்.

வைஷாலி உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலக தலைவன்’ படத்தில் சிறு வேடத்திலும், ‘நிமிர்ந்து செல்லடி’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்!

17

Leave a Reply

Your email address will not be published.