நீதிபதி கற்பகவிநாயகத்தின் 2 புத்தகங்கள் வெளியீடு!  6 நீதிபதிகள் நேரில் வாழ்த்து!

நீதிபதி எம்.கற்பகவிநாயகம் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் 8-வது தொகுப்பு (Judgements On Humanism – Part VIII) நூல்  மற்றும் நாளும் ஒரு நற்சிந்தனை நூல் வெளியீட்டு விழா சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

நூலை நீதிபதி டி.ராஜா வெளியிட, நீதிபதி எஸ்.விமலா பெற்றுக்கொண்டார்.

விழாவில் நீதிபதிகள் கே.வெங்கட்ராமன்,ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா,சுந்தர் மோகன்,எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நீதிபதி எம்.கற்பகவிநாயகம் தனி மனித ஒழுக்கம், நீதி நேர்மையுடன் வாழ வேண்டும், பொய் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விழாவில்,அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக நிறுவனரும், தலைவருமான எம்.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மணிவண்ணன்,அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக தமிழ் மாநில தலைவர் சின்ராஜ், தமிழ் மாநில செயலாளர் எஸ்.கருப்பண்ணன்,தமிழ் மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரராஜா, தமிழ் மாநில அமைப்பாளர் ஏ.ராஜன்,பாதுகாப்புக் கழக பொதுக்குழு ஆர்.கே.ராஜா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் எம்.கற்பகவிநாயகத்தின் 300 ரூபாய் மதிப்புள்ள தீர்ப்புகள் அடங்கிய 8-வது தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp