மிரட்டல் விடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலையின்! உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியது ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.’

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமையகத்தில் 25.9. 2022 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியதாவது…
ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் கடந்த சில தினங்களாக தேசிய புலனாய்வு முகமை [ என்.ஐ. ஏ] பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலங்களில் சோதனை செய்து தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. எதற்காக, என்ன வழக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை தெரிவிக்காமல் கைது செய்துள்ளது. மேலும் அவர்களை ரிமாண்ட் செய்யும்போது கூட என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பதை நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை [ என்.ஐ. ஏ] தெரிவிக்கவில்லை.
எனவே இதனை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . தேசிய புலனாய்வு முகமையின் [ என்.ஐ. ஏ] சோதனை மற்றும் கைதுக்குப் பிறகு கோவை, திண்டுக்கல், மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் பாஜக அலுவலகம் மற்றும் ஆர்எஸ்எஸ் ஐ சேர்ந்த நபர்களின் அலுவலகங்கள், வாகனங்கள் மீது மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை சாக்காக வைத்துக் கொண்டு
தேசிய புலனாய்வு முகமைக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களை திசை திருப்ப பாஜக வும் அதன் சார்பு ஊடகங்களும் திட்டமிட்டு வருகின்றன.
24-09-22 அன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தாம்பரத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினர் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமெனவும் , பெட்ரோல் குண்டுகளை வீசக்கூடாது எனவும் பதிலுக்கு நாங்களும் பிரச்சினை செய்ய களத்திற்கு வந்தால் நிலைமை மோசமாகிவிடும் என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். காவல்துறை பெட்ரோல் குண்டு தொடர்பாக பலரை சந்தேகத்தின் பேரிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் விசாரித்து வருகின்றது. ஆனால் பாஜகவினர் தங்களின் அரசியல் லாபத்திற்காக, தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கி வருவதுடன் தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் மத்திய அரசின் பெயரைச் சொல்லி தமிழக அரசை மிரட்டி வருகின்றனர்
இதற்கு முன்பு பாஜக அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் அனைத்தும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் , தங்களை அதிகாரமிக்க நபராக வெளியில் காட்டிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற அரசியல் லாபங்களுக்கு தங்களுக்கு தாங்களே குண்டுகளை வைத்துக்கொண்டும், வாகனங்களை தீ வைத்துக் கொண்டும், கைகளை கட்டிப்போட்டு கொண்டும், கைகளை வெட்டிக்கொண்டும் சிக்கிக்கொண்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு என்பதை தமிழகத்தில் உள்ள சாமானிய மக்கள் கூட நன்றாக அறிவார்கள் . எனவே காவல்துறை இந்தக் கோணத்திலும் உரிய விசாரணையை நடத்திட வேண்டும்.
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலையின் மிரட்டல் தொனியிலான இந்த கூற்று சட்டத்திற்கு விரோதமானது மற்றும் இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைந்திடும் குறுமதி கொண்டது என்பதை நாங்கள் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம் . இப்படியான வெறுப்பு பேச்சை பேசியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.
மாநிலத்தின் சுயாட்சி உரிமையை பறித்திடும் வண்ணம் குறிப்பாக சிறுபான்மை மக்களை மிரட்டிடும் வகையில் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு முகமையின் சோதனை மற்றும் கைதை வன்மையாக கண்டிக்கின்றோம். அதேபோன்று ,இதனை பயன்படுத்தி தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடைந்திட எத்தனிக்கும் பாஜகவின் போக்கை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கின்றது. இது விஷயத்தில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது.
இவர் அவர் தெரிவித்தார்
பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், செயலாளர்கள் நாகூர் மீரான், சாகுல் ஹமீது, மண்டல செயலாளர் அகமது முகைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.