பறையர் இன மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தை பெற வேண்டி உருவானது ‘திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு.’

பறையர்களை ஒன்றுபடுத்தி இழந்த உரிமைகளை வென்றெடுக்கவும் மறைக்கப்பட்ட பறையர்களின் வரலாற்றை முன்னெடுக்க வேண்டியும், பறையர்களை ஒருங்கிணைத்து இழந்த உரிமைகளை வென்றெடுக்கவும், சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தை பெற வேண்டியும் ‘திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு‘ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது!
பறையர் சமூக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிற ஏர்போர்ட் மூர்த்தி, வழக்கறிஞர் இளங்கோ, ரேவதி நாகராஜன், ஏ.டி.இ. ராமமூர்த்தி பறையர், கௌதமன் சித்தார்த்தன் உள்ளிட்டோர் இணைந்த ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் 17.10. 2022 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்!
தங்களின் திராவிட எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கான காரணங்களை எடுத்துரைத்தனர்!