தமிழனை திராவிடன் என்றபோது ஏன் கோபம் வரவில்லை? -தமிழ்நாட்டு மக்களிடம் இயக்குநர் பேரரசு கேள்வி

சில தினங்கள் முன் தமிழக ஆளுநர் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று குறிப்பிட வேண்டும் என பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் பலரும் அது சம்பந்தமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் பேரரசு விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டு மக்களிடம் கேள்வியொன்றை முன் வைத்துள்ளார்.
அவரது அறிக்கையின் விவரம்:
தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வருகின்ற கோபம், தமிழ்நாட்டை திராவிடநாடு என்றபோது, தமிழனை திராவிடன் என்றபோது, நம் தமிழக முதல்வர் தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று சொல்லாமல் திராவிட மாடல் என்று சொன்ன போது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை?

திராவிட நாட்டை மொழிவாரியாக பிரித்து தெலுங்கர்களுக்கு ஆந்திரவாகவும்,
மலையாளிகளுக்கு கேரளாவாகவும்,
கன்னடர்களுக்கு கர்நாடகாவும்,
தமிழர்களுக்கு தமிழ் நாடாகவும் பிரித்துவிட்ட பின்பு இன்னும் நாம் மட்டும் திராவிடர்களாக அழைக்கப்படுவது ஏன்?